BREAKING NEWS: நகை பிரியர்களுக்கு செம்ம ஹேப்பி நியூஸ்… “சவரனுக்கு ரூ .880 குறைவு…” உடனே கிளம்புங்க…!

By Visaka on ஆடி 7, 2026

Spread the love

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களின் எதிரொலியாக, தமிழகத்தில் இன்று (ஜூலை 7) தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து நுகர்வோருக்கும் இல்லத்தரசிகளுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹880 வரை சரிந்து, ஒரு சவரன் தங்கம் ₹1,07,600-க்கு விற்பனையாகிறது.

   

அதேபோல், கிராமுக்கு ₹110 குறைந்து ஒரு கிராம் 22 கேரட் தங்கம் ₹13,450 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது. உலகளாவிய பொருளாதாரக் காரணிகளால் சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் சற்று குறைந்ததே நம்மூரிலும் இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் இந்த விலைக் குறைவு நீடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.