BREAKING: கேஸ் சிலிண்டர்.. அரசின் புதிய அறிவிப்பு வெளியானது…!!

By Muthu Mani on பங்குனி 13, 2026

Spread the love

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த வதந்திகளால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள தேவையற்ற பீதியைக் குறைக்க மத்திய அரசு தற்போது அதிரடி அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் மாவட்ட வாரியாக விநியோகத்தைக் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதே வேளையில், ஊடகங்கள் இதுதொடர்பான செய்திகளை வெளியிடும்போது, பழைய வீடியோக்களையோ அல்லது புகைப்படங்களையோ மீண்டும் மீண்டும் காட்டி மக்களைக் குழப்பமடையச் செய்யாமல், துல்லியமான தேதி மற்றும் நேரத்துடன் கூடிய நேரடி காட்சிகளை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தட்டுப்பாடு குறித்து அஞ்சத் தேவையில்லை என்றும், விநியோகச் சங்கிலி சீராக இருப்பதை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.