BREAKING: குட்கா, பான் மசாலாவுக்கு தடை நீட்டிப்பு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

By Muthu Mani on ஆனி 2, 2026

Spread the love

தமிழகத்தில் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை மற்றும் நிக்கோட்டினைச் சேர்மமாகக் கொண்ட உணவுப் பொருட்களின் விற்பனைக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின்படி, மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இத்தகைய ஆபத்தான பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வரும் சூழலில், தற்போதைய புதிய நீட்டிப்பின்படி இந்தத் தடையானது வரும் 2027-ம் ஆண்டு மே 23-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் முழுமையாக அமலில் இருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.