நீ எனக்கு வேண்டாம், நிச்சயம் முடிந்ததும் காதலன் சொன்ன வார்த்தை… மாற்றுத்திறனாளி பெண் எடுத்த விபரீத முடிவு..!

By Srimathi on ஆவணி 24, 2025

Spread the love

சென்னை, வேப்பேரியை சேர்ந்தவர் தர்ஷன் (26), ஹார்டுவேர் டீலர்ஷிப் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தர்ஷனுக்கும், ராயபுரத்தை சேர்ந்த ஹாசிதா (25) என்ற பெண்ணுக்கும் இடையே, காதல் மலர்ந்தது. ஹாசிதா ஒரு மாற்றுத்திறனாளி. சிறு வயது முதலே இடது கால் ஊனமுற்றவர். இதை அடுத்து, இரு வீட்டார் சம்மதத்துடன் அண்ணா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இருவரும் எப்போதும் போல் பேசி, பழகி வந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக, தர்ஷன் ஹாசிதாவை தொடர்பு கொண்டு, “நீ எனக்கு வேண்டாம். உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஹாசிதா தனது பெற்றோரிடம், “நான் தர்ஷன் உடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, வேப்பெரியில் உள்ள தர்ஷன் வீட்டில், இரு வீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்திய பொழுதும், தர்ஷன் மனம் மாறவில்லை. இதனால் மனமுடைந்த ஹர்ஷிதா, 7 ஆவது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார், தர்ஷனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.