ஆந்திர மாநிலத்தில் வசித்து வரும் இளம் பெண் ஒருவருக்கும் பெங்களூரு எச் எஸ் ஆர் லே அவுட் அருகே வசிக்கும் முகமது இஷாக் என்ற அப்துல் ரஷல்(28) என்பவருக்கும் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக முகமது உறுதி அளித்துள்ளார். இதனிடையே இளம்பெண் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை திருமணம் செய்ய முகமது மறுத்து விட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து போலீசில் இளம் பெண் புகார் அளித்தார். அந்த புகாரில், எனக்கும் முகமதுக்கும் கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. என்னை காதலிப்பதாக அவர் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூருக்கு வரும்படி தெரிவித்தார்.
நானும் பெங்களூரு வந்த நிலையில் என்னை தனி சந்திராவில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி என்னை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்தார். பிறகு அடிக்கடி என்னை ஆந்திராவில் இருந்து பெங்களூருக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்தார். கடந்த மாதம் அவர் வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருப்பது எனக்கு தெரிந்தது. இது பற்றி அவரிடம் கேட்டதும் தகராறு செய்தார். பிறகு என்னை திருமணம் செய்யவும் மறுத்துவிட்டார். எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால் நான் கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றேன். பிறகு முகமது குடும்பத்தினர் என்னை அழைத்து சமாதானம் பேசினர். அப்போது முஸ்லிம் மதத்திற்கு மாறினால் தான் திருமணம் செய்வேன் என்று முகமது மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியதால் நானும் மதம் மாறுவதற்கு மறுத்ததால் தற்போது வேறொரு முஸ்லிம் பெண்ணுடன் முகமதுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வேறு மதத்தை சேர்ந்த என்னை காதலித்து கற்பழித்துவிட்டு தற்போது மதம் மாறினால் தான் திருமணம் செய்வேன் என்று கூறுகிறார்கள் என இளம் பெண் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த சம்பவம் குறித்து போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
