மேட்ரிமோனி மூலம் காதல்… “பலமுறை உல்லாசம்” திடீரென ஆண் நண்பர் மீது சந்தேகம்… நகை, பணம் எல்லாமே போச்சு… காவல்நிலையத்தில் கதறும் பெண்..!

By Soundarya on புரட்டாதி 29, 2025

Spread the love

சென்னை சூலமேட்டையைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் தான் திருமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்திருந்ததாகவும், இதன் மூலம் சூர்யா என்பவர் அறிமுகம் ஆகி அவரோடு பழகி வந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்தார். மேலும் இருவரும் சேர்ந்து நிலம் வாங்கலாம் என்று கூறி காரில் அழைத்து சென்று அந்த இடத்தையும் காட்டி அதற்காக என்னிடம் 8 லட்சம் ரூபாய் பணம் 9 சவரன் நகை ,லேப்டாப், செல்போன் என அனைத்தையும் வாங்கிக் கொண்டார். எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்கும்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் என்னிடம் வாங்கிய பணம் மற்றும் நகைகளை கேட்டபோது உல்லாசமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவேன் என்று மிரட்டினார். பின்பு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு சந்தேகம் அடைந்து அவர் குறித்து விசாரித்த போது தான் மோசடி செய்தது தெரியவந்தது.  இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் திருநெல்வேலியில் பதுங்கி  இருந்த சூர்யாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தார்கள்.  பின்பு அவரிடமிருந்து செல்போன், லேப்டாப், நகை பறிமுதல் செய்யப்பட்டது.