சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் செய்யும் ஆபத்தான செயல்கள் தற்போது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. ரீல்ஸ் (Reels) எடுப்பதற்காகத் தங்களது உயிரைப் பணையம் வைத்துச் செய்யப்படும் இத்தகைய சாகசங்கள் வீரமல்ல, அது முட்டாள்தனத்தின் உச்சம் என்றே சொல்ல வேண்டும். ஒரு சிறிய தவறு நடந்தால் கூட மொத்த வாழ்க்கையும் முடிந்துவிடும் என்பதை உணராமல், ஒரு கண நேரப் புகழுக்காக இளைஞர்கள் இவ்வளவு பெரிய ஆபத்தை எதிர்கொள்வது வேதனைக்குரியது.
यह बहादुरी नहीं, सरासर बेवकूफी है ! एक छोटी सी चूक और सब खत्म..!
अपनी जान की नहीं तो कम से कम अपने माता-पिता के बारे में तो सोचो..!
सिर्फ एक पल की मस्ती के लिए अपनी जान खतरे में डालना समझदारी नहीं है..!
माता-पिता हर जगह साथ नहीं हो सकते, इसलिए बच्चों को भी समझना होगा कि… pic.twitter.com/wqidmfavvY
— Ramesh Meena (@MeenaRamesh91) March 17, 2026
ஓடும் லாரியின் சக்கரங்களுக்கு மிக அருகில் ஸ்கேட்டிங் செய்தபடி செல்லும் சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சிறிய தடுமாற்றம் ஏற்பட்டாலும் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில், இந்த முட்டாள்தனமான செயல் பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது. வெறும் ஒரு நிமிடப் புகழுக்காகவும், சமூக வலைதள லைக்குகளுக்காகவும் லாரிக்கு அடியில் ஸ்கேட்டிங் செய்யும் இந்தச் சிறுவனின் செயல் கண்டிக்கத்தக்கது. “ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உன் பெற்றோரின் நிலை என்ன?” என நெட்டிசன்கள் பலரும் இந்தச் சிறுவனுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பெற்றோர்கள் எல்லா நேரங்களிலும் பிள்ளைகளுடன் கூடவே இருக்க முடியாது. எனவே, எவை ஆபத்தானவை, எவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதை இளைஞர்களே உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு சில விநாடி மகிழ்ச்சிக்காக அல்லது சமூக வலைதளப் பாராட்டுக்காகத் தங்களை ஆபத்தான சூழலில் தள்ளிக்கொள்வதை நிறுத்திவிட்டு, பொறுப்புடன் செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
