ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த தாய்வழிப் பாட்டியை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிறுவனின் பெற்றோர் சமையல் ஆர்டர்கள் எடுத்துச் செய்யும் தொழில் செய்து வருவதால், சுபநிகழ்ச்சி நாட்களில் வேலைப்பளு காரணமாகச் சிறுவனை லக்காபுரத்தில் உள்ள அவனது பாட்டி வீட்டில் விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில்தான், பேரனிடமே பாட்டி தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி பாட்டி வீட்டிற்குச் செல்லுமாறு பெற்றோர் கூறியபோது, அச்சிறுவன் தீவிரமாக மறுத்து கடும் பதற்றமடைந்துள்ளான். சிறுவனின் நடத்தையில் சந்தேகமடைந்த தாய் அதட்டலாக விசாரித்தபோது, அவன் ஆறாம் வகுப்பு படித்தது முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாட்டி தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறி அழுது புலம்பியுள்ளான். தன் பெற்ற மகனிடமே சொந்தத் தாயார் இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், உடனடியாகத் தன் தாயாரின் வீட்டிற்குச் சென்று நியாயம் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பெற்ற தாயார் என்றும் பாராமல் தனது மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று தாய் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சிறுவனுக்குப் பாலியல் தொந்தரவு அளித்த பாட்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை உடனடியாகக் கைது செய்தனர். சொந்த பேரனுக்கே பாட்டி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பெரும்…
தமிழ்நாட்டில் 16 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் அதிவேகமாக ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த…
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பண்டிகைக் கால முன்பணமாக ரூ.20,000 வழங்கிட அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள செய்தி தொழிலாளர்கள் மத்தியில்…
விலைவாசி உயர்வால் பொதுமக்கள் சந்தித்து வரும் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், நியாயவிலைக்கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை மையங்கள் மூலமாகவே…
ஹைதராபாத் ஐஎஸ் சதன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 3 வயதான இசானுதீன் என்ற சிறுவன், தனது பெற்றோருடன் சாட் உணவகம்…
நள்ளிரவு நேரத்தில் களைப்பாக இருந்த தாய் ஒருவர் தனது மொபைல் போனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது சிறிய மகள் தானும்…