அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேளிக்கை பூங்கா ஒன்றில், 14 வயது சிறுவன் ஒருவன் ‘ஃப்ரீ ஃபால்’ எனப்படும் ராட்சத ஊஞ்சல் விளையாட்டின் போது 430 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தச் சிறுவன் இருக்கையில் அமரவைக்கப்பட்டு பாதுகாப்பு வளையங்கள் பூட்டப்பட்ட நிலையிலும், விளையாட்டுத் தொடங்கிய சில வினாடிகளில் எதிர்பாராத விதமாக இருக்கையிலிருந்து நழுவி தரைமட்டத்திற்கு வீசப்பட்டான்.
இந்த விபத்தின் போது சிறுவன் பலமுறை அபயக்குரல் எழுப்பியும், அங்குள்ள ஊழியர்கள் அதைக் கவனிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. பாதுகாப்பு உபகரணங்கள் சரியாகப் பொருத்தப்பட்டதா என்பதைச் சரிபார்க்கத் தவறியதே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணம் எனத் தெரிகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரின் நெஞ்சைப் பதறவைப்பதாக உள்ளது.
🚨💔 Heartbreaking tragedy unfolds in China again. On May 3, a female tourist named Liu died in a horrific accident at Maliuyan Adventure Park in Sichuan’s Huaying City. Strapped into the “Waterfall Swing” — a 168-meter-high ride over a roaring waterfall — she repeatedly screamed… pic.twitter.com/AUGPeQEfhv
— Aric Chen (@aricchen) May 5, 2026
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட விளையாட்டு தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கேளிக்கை பூங்காக்களில் உள்ள இயந்திரங்களின் தரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிறுவனின் உயிரைப் பறித்த இந்த அலட்சியப் போக்கு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
