ராஜஸ்தானின் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள சாஞ்சோர் நகரில், செப்டம்பர் 25 அன்று அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ வாகனம் மோதியதில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்திரா காலனியைச் சேர்ந்த அச்சிறுவன், காலை 10:15 மணியளவில் குடும்பத்தினருடன் கடைக்குச் சென்றுள்ளான். அப்போது அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென சாலைக்குச் சென்றபோது, அதிவேகமாக வந்த எஸ்.யு.வி வாகனம் அவன் மீது மோதியது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவனை, அவரது குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில், சிறுவன் சாலையை நோக்கி ஓடுவதும், அவனைத் தடுக்க இரு பெண்கள் பின்னாலேயே ஓடிவருவதும் பதிவாகியுள்ளது. ஆனால், அதற்குள் அந்த ஸ்கார்பியோ வாகனம் சிறுவன் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளது.
https://twitter.com/HateDetectors/status/2103821889584161208/video/1
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் அடயாளம் கண்டு கைது செய்வதற்காக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
