பெற்றோர்களே உஷார்… ரம்புட்டான் பழம் தொண்டையில் சிக்கி 1 வயது குழந்தை பலி… பெரும் சோக சம்பவம்…!

Spread the love

ரம்புட்டான் பழம் இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய பகுதிகளில் பயிரிடப்படுகிறது. “ரம்புட்” என்ற மலாய் வார்த்தையிலிருந்து இதன் பெயர் உருவாகியது, இந்த பழமானது வெளிப்புறம் மென்மையான முள் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். உள்ளே ஜெல்லி போன்ற சதைப்பகுதி உள்ளது, இதில் ஒரு விதை இருக்கும். இந்த பழமானது இனிப்பு மற்றும் லேசான புளிப்பு சுவை கொண்டது.

இதனிடையே ரம்புட்டான் பழம் தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் அதிரா. இவருக்கு ஒரு வயதில் அவ்யுக்த் என்ற குழந்தை இருந்த நிலையில் நேற்று மாலை பாட்டியுடன் அமர்ந்து குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அருகில் இருந்த ரம்புட்டான் பழத்தை எடுத்து குழந்தை விழுங்கியுள்ளது.

அது குழந்தையின் தொண்டையில் சிக்கிய நிலையில் உடனடியாக பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு எவ்வளவு சிகிச்சை அளித்தும் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையின் உடல் பெரும்பாவூரில் உள்ள மருத்துவமனையில் பிணவறையில் தற்போது உள்ளது. குழந்தைகளுக்கு எந்த உணவுகளை கொடுத்தாலும் அதில் பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும்.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

5 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

6 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

6 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

7 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

7 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

7 மணத்தியாலங்கள் ago