சுர்ஜித் பெற்றோர் இருவரும் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள்… நெல்லையை உலுக்கிய ஆவணக்கொலையில் போலீஸ் அதிரடி..!!

By Soundarya on ஆடி 28, 2025

Spread the love

நெல்லையில் தன்னுடைய சகோதரியை காதலித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை உதவி காவல் ஆய்வாளரின் மகன் வெட்டி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல் உதவி ஆய்வாளராக இருப்பவர் சரவணகுமார் மற்றும் கிருஷ்ணவேணியின் மகள் நெல்லை வேதா மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணிபுரிந்து  வந்துள்ளார்.

அவருக்கும் அவரிடம் சிகிச்சை பார்க்க தாயை அழைத்து வந்த பள்ளி தோழன் கவின் என்பவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் வெவ்வேறு ஜாதி என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் மருத்துவமனைக்கு தன்னுடைய தாயை அழைத்து வந்த கவிஞனை பெண்ணின் சகோதரர்  சுர்ஜித் என்பவர் தனியாக பேசலாம் என்று கூறி டூவீலரில் அழைத்து சென்று வெட்டி படுகொலை செய்து விட்டு போலீசில் சரணைந்துள்ளார்.  இந்நிலையில் கொலை செய்யப்பட்ட காவிரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனையடுத்து எஸ்.ஐ.களாக உள்ள சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என சாலை மறியலில் ஈடுபட்ட கவினின் உறவினர்களிடம் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்