இந்த்ரஜா இதை மட்டும் பாத்துக்கணும் ; கண்கலங்கிய சோனியா… அட்வைஸ் செய்த போஸ் வெங்கட்

By Deepika

Published on:

ரோபோ ஷங்கருக்கு அறிமுகமே தேவையில்லை, சின்னத்திரையில் ஆரம்பித்து வெள்ளித்திரையில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். இவரின் மகள் இந்தரஜா ஷங்கர் பிகில், விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். குறிப்பாக பிகில் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த பாண்டியம்மா கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.

Indraja shankar marriage

சில நாட்களுக்கு முன்பு ரோபோ சங்கர் உடல் எடை மெலிந்து காணப்பட்டார், அவருக்கு வியாதி என பலர் கூறினார்கள். இந்தநிலையில் மீண்டும் ரோபோ சங்கர் பழைய பார்முக்கு வந்துள்ளார், அதற்கு காரணம் சந்தோசம் தான். ஆம், மகளின் கல்யாண செய்தி தான் அவருக்காய் சந்தோசத்தை கொடுத்துள்ளது. அதனாலேயே மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக வந்துவிட்டார் ரோபோ சங்கர்.

   
Indraja shankar marriage

இந்த்ரஜா சங்கர் தனது சொந்த மாமாவையே திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் அவர்களின் சொந்த ஊரில் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. விஜய் டிவி பிரபலங்கள், அறந்தாங்கி நிஷா, மதுரை முத்து, ராமர் தொடங்கி நடிகர் விமல், நடிகை அம்ரிதா அய்யர் என பலர் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Bose venkat advice to indraja

ரோபோ சங்கரின் குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர்கள் என்றால் நட்சத்திர தம்பதி போஸ் வெங்கட்டும் அவர் மனைவியும் சோனியாவும் தான். இந்த்ரஜாவுக்கு முதன் முதலில் நலுங்கு வைத்ததே சோனியா தான். அந்தளவுக்கு இவர்களின் குடும்பமும் நட்புடன் உள்ளார்கள். இந்தநிலையில் கல்யாணம் முடிந்த கையேடு இந்தராஜாவுக்கு அத்வானி கொடுத்துள்ளனர் இந்த தம்பதி அவர்கள் கூறியதாவது, வாழ்க்கை ஒரு ரேஸ் போல் ஆகி விட்டது. இந்த ரேஸில் ஒருவருக்கு ஒருவர் முந்தாமல் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என போஸ் வெங்கட் கூறினார்.

soniya bose about indraja

சோனியா பேசும்போது, எங்கள் கல்யாணத்தின் போது இந்த்ரஜா கைக்குழந்தை, இன்று அவளுக்கு கல்யாணம். நாட்கள் வேகமாக ஓடுகிறது. பிள்ளைகள் வளர்ந்து விட்டனர். எனக்கு ஆறுதல் என்னவென்றால் மாப்பிள்ளை கார்த்தி என்பதால் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தான் இந்த்ரஜா இருப்பாள். அவள் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என பிராத்திக்கிறேன் என்று கூறியுள்ளார்

author avatar
Deepika