29 வருடத்தைக் கடந்த பாம்பே.. தேசிய விருது பெற்ற பாம்பே படத்தின் மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

By Ranjith Kumar

Published on:

இந்தியா முழுவதும் மாபெரும் இயக்குனராக வலம் வருபவர் தான் “மணிரத்தினம்”. இவர் முதல் முதலில் 1983 ஆம் ஆண்டு கன்னட படமான “பல்லவி அணு பல்லவி” என்ற படத்தை இயக்கி திரைக்கு கொண்டு வந்தார், அப்படம் தோல்வியடைந்து, அதன்பின்னதாக தமிழ் சினிமாவில் கார்த்திகை வைத்து 1986 ஆம் ஆண்டு “மௌன ராகம்” என்று படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்தார். அதன் பின் இவரின் வளர்ச்சி எங்கோ சென்றது.

அதற்கு அடுத்ததாக நாயகன், அஞ்சலி, தளபதி, அலைபாயுதே போன்ற மாபெரும் படங்களை ஆரம்ப காலக்கட்டத்தில் கொடுத்து, தற்போது உள்ள ரசிகர்களின் மனதை கவரும் படி ஓ காதல் கண்மணி, செக்கச் சிவந்த வானம், காற்று வெளியிடை, பொன்னியின் செல்வன் போன்ற மிகச் சிறந்த படங்களை தந்து கொண்டிருக்கிறார். இவரின் ஆரம்ப காலகட்டத்தில் கொடுத்து இப்ப வரை மக்கள் மனதில் நீங்காத படம் தான் ரோஜா, அலைபாயுதே, பாம்பே போன்ற படங்களாகும். இதில் “பாம்பே” படம் தற்போது வரை மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.

   

1995 ஆம் ஆண்டு மணிரத்னம் எழுதி இயக்கிய இப்படத்தில் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா இருவரும் சேர்ந்து மாபெரும் நடிப்பை வெளிக் கொண்டு வந்து ரசிகர் மத்தியில் இன்றுவரை நீங்காத இடம் பிடித்துள்ளார்கள். தற்போது வரை 29 வருடங்களைக் கடந்தும் மணிரத்தினத்தின் சிறந்த படத்தில் இது ஒன்றாக உள்ளது. இப்படத்திற்காக சிறந்த இயக்குனர் என்றும் சிறந்த எடிட்டர் என்றும் நேஷனல் அவார்ட் வாங்கியுள்ளார்கள்.

இப்படம் ஆரம்ப காலகட்டத்தில் வெளியாகி மக்கள் எதிர்பார்ப்பை தாண்டி திரையில் வெறித்தனமாக ஓடி மகத்தான வசூலை பெற்றது, பாம்பை படம் 2.70 கோடி செலவில் எடுக்கப்பட்டு வெளியாகி முதல் நாளிலே 34 லட்சம் வசூலை பெற்றது. அதன் பின்னதாக ஒரு வாரம் கடந்த பின் 3 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை தட்டி தூக்கியது. இந்தியன் நெட் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மொத்தம் 8.58 கோடி வசூலை பெற்று மகத்தான சாதனை படைத்தது. இப்படம் ஓவர்சீஸ் ஆக 20 லட்சம் கலெக்ஷனை பெற்று,

ஒட்டு மொத்தமாக உலக அளவில் 14.20 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனைப் பெற்று இதுவரை இல்லாத மகத்தான சாதனையை இப்படம் செய்துள்ளது. பிரம்மாண்ட வசூலைப் பெற்று 1995 சமயத்தில் இப்படம் மெகா பஸ்டர் படமாக மாறியது.

author avatar
Ranjith Kumar