தென்னிந்திய சினிமா அளவில் மிகவும் பிரபலமான பாடகி தான் பாம்பே ஜெயஸ்ரீ. 60 வயதாகும் இவர் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா, ஏ ஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா என அனைத்து முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையிலும் இவரது குரல் மாயாஜாலம் செய்திருக்கும். மெல்லிய குரலுக்கு சொந்தக்காரியான பாம்பே ஜெயஸ்ரீயின் குரலுக்கு மயங்காதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தன்னுடைய பாடலால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டவர்.
இவ்வளவு புகழ் பெற்ற பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு அம்ரித் ராம்நாத் என்ற மகன் உள்ளார். இவர் தமிழில் முதல் முதலாக சமீபத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ள இவர் மலையாளத்தில் வெளியான வருஷங்களுக்கு சேஷம் என்ற படத்திற்கு ஏற்கனவே இசையமைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த் நடிப்பில் வெளியான 3BHK என்ற படத்தில் முதன்முதலாக இசை அமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ள இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இப்படியான நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய அம்மா பாம்பே ஜெயஸ்ரீ என்னுடைய கேரியருக்கு 100% சப்போர்ட்டாக இருந்து வராங்க. நான் என்னுடைய வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் இருவருமே எனக்கு பக்க பலமாக இருந்து ரொம்ப சப்போர்ட் பண்ணுவாங்க. எங்க அம்மா சின்ன வயசுல இருந்தே இசை பற்றி எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்காங்க. மியூசிக் மட்டுமல்லாமல் பல நல்ல விஷயங்கள் நிறைய சொல்லிக் கொடுத்திருக்காங்க. எங்க அம்மாவை பார்த்து நான் நிறைய கத்துக்கிட்டேன்.
என்னுடைய பெற்றோர்கள் இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள் மாதிரி தான் இன்னைக்கு வரைக்கும் இருந்து வராங்க. அதனால் மியூசிக்கில் நான் பண்ண விரும்பும் விஷயங்களை எந்த பிரஷரும் இல்லாமல் நிம்மதியாக பண்ண முடிகிறது. இவ்வளவு சீக்கிரம் நான் சினிமாவில் நுழைவேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதுவும் எனக்கு பிடிச்ச ஸ்ரேயா கோஷல், சின்மயி ஆகியோரிடம் சேர்ந்து பணியாற்றுவேன் என்பதை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. உண்மையிலேயே இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான். இந்தப் படத்தில் சித்தார்த் நடித்த கதாபாத்திரம் என் வாழ்க்கையிலும் சில நேரங்களில் ஒத்துப் போவது போல எடுத்துக் கொண்டேன். இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு ஒரு சிறந்த அனுபவம் தான் என்று அம்ரித் ராம்நாத் பேசியுள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…