சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததை தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் திரிஷா வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபகாலமாகவே சினிமா நட்சத்திரங்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வருகிறது.
