சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் மற்றும் நடிகர் பிரபுவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படைப்பிரிவினர் சோதனை நடத்தினார்கள். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
முன்னதாக நேற்று நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கூறி மர்ம நபர்கள் மெயில் அனுப்பியிருந்தனர்.
