எல்லா பெண்களுக்கும் அவர்களின் திருமணத்தைப் பற்றி ஒரு பெரிய கனவு இருக்கிறது. அந்த நாள் முழுவதும் அற்புதமாகஅமைய வேண்டும் என்று அதிக பணம் செலவு செய்கின்றனர். அதேபோன்று பல பாலிவுட் நடிகைகளும் தனது திருமணத்திற்கான ஆடைகளுக்கு மட்டும் அதிக செலவு செய்து உள்ளனர்.

அதில் முதலிடத்தில் இருப்பவர் பாலிவுட் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஐஸ்வர்யா ராய். இவர் உலக அழகி என்ற பட்டம் பெற்றவர். ‘இருவர்’ என்ற படத்தின் மூலம் திரைஉலகில் அறிமுகமானார். பிறகு தென்னிந்தியாவில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.

இவர் 2007 ஆம் ஆண்டு ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஆன அமிதாபச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஆனது பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஐஸ்வர்யா ராய் கட்டி இருந்த புடவை தங்கம் மற்றும் வைரங்கள் ஆனது இதன் விலை 75 லட்சமாம்.

இதை தொடருந்து இரண்டாவது இடத்தில் இருபவர் பாலிவுட் நடிகை சில்பா செட்டி. இவர் லண்டனைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு ‘பிர் மிலேங்கே’ என்ற திரைப்படத்தில் அவர் எய்ட்ஸ் நோயாளியாக நடித்ததற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

2009 ஆம் ஆண்டு ராஜா குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது சில்பா செட்டி கட்டி இருந்த புடவையின் விலை 50 லட்சமாம்.

இதைத்தொடர்ந்து கரீனா கபூர் கான் 50 லட்சமும் , அனுஷ்கா சர்மா கோஹ்லி 30 லட்சமும், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் 17 லட்சமும் செலவு செய்துள்ளனர். சமீபத்தில் திருமணம் ஆக உள்ள பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி அவர்களின் திருமண உடை இவற்றில் எந்த இடத்தை பிடிக்கும் என்று ரசிகர் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

