49 வயசுலயும் 19 வயசு போல இருக்கும் விஜய் பட நடிகை.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

By Nanthini on மார்கழி 10, 2024

Spread the love

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஷில்பா ஷெட்டி. பாலிவுட் நடிகையான இவர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

   

அதனைத் தொடர்ந்து விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் மேகரீனா என்ற பாடலுக்கு கலக்கலான நடனமாடி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

   

 

அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பின்னர் ஒரு தமிழ் படத்தில் கூட இவர் நடிக்கவில்லை. இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஹிந்தி மற்றும் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

சினிமாவில் செம பிசியாக இருந்த இவர் பிரபல தொழிலதிபர் ராஜ்குந்த்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு சில நடிகைகள் போல சினிமாவில் இருந்து விலகாமல் தொடர்ந்து சினிமாவில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.

அதே சமயம் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ரசிகர்களை குஷிப்படுத்தும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது 49 வயதாகும் ஷில்பா ஷெட்டி டைட்டான ஜிம் உடையில் வெளியீட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு 49 வயசுனா யாராவது நம்புவாங்களா என்று கேட்டு வருகிறார்கள்.