மும்பையில் அதிர்ச்சி…. 10 முறை துப்பாக்கியால் சுடப்பட்ட நடிகர் டைகர் ஷெராஃப் கார்…. பதறிப்போன பாலிவுட்…. உச்சக்கட்ட அதிர்ச்சி….!

By Nanthini on ஐப்பசி 19, 2026

Spread the love

மும்பையில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் சென்ற கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூஹு பகுதியில் அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென காரை நோக்கி 10 முறை துப்பாக்கியால் சுட்டது. இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக நடிகர் டைகர் ஷெராஃப் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார். இருப்பினும், காரின் ஓட்டுநர் மற்றும் மற்றொரு நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்தக் கும்பலைச் சேர்ந்த அனில் பண்டிட் என்பவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், சல்மான் கானுடன் இணைந்து நடிப்பவர்கள் மற்றும் பணியாற்றுபவர்களுக்கு இதுவே இறுதி எச்சரிக்கை என்றும், எங்களின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாதவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். ஏற்கனவே சல்மான் கான் மீது குறிவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாலிவுட் திரையுலகினர் மத்தியில் இந்தச் சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

   

சம்பவம் குறித்து ஜூஹு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் 12 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்து வரும் போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். பிரபல நடிகரின் கார் மீது நடத்தப்பட்ட இந்த ஆயுதத் தாக்குதல் பாலிவுட் வட்டாரத்தில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.