பிரபல பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் வெப்ப வாதம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான்.
பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் இவருக்கு ஹிந்தியில் மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிஃபயர் 1 சுற்றில் வெற்றி பெற்று கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கின்றது.
இந்த போட்டியை கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக்கான் நேற்று மைதானத்தில் நேரடியாக கண்டு களித்து தன் வீரர்களை உற்சாகப்படுத்தி இருந்தார். இதற்காக குடும்பத்துடன் அகமதாபாத்தில் தங்கி இருந்தார் நடிகர் ஷாருக்கான். இந்நிலையில் நேற்று மதியம் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள KD மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

#image_title

#image_title
அவருக்கு வெப்ப அலைகள் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்த ஷாருக்கான் தற்போது அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவரின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள்.