ஈரோடு மாவட்டம் கெட்டிசெவியூர் பகுதியில் மோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் காளான் வளர்வதால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் காளான் பறிக்க வருவார்கள். மேலும் தோட்டத்தில் கிடக்கும் தீவனங்களையும் கால்நடைகளுக்காக சேகரித்து செல்வார்கள். நேற்று முருகேசன் என்பவர் தோட்டத்திற்கு சென்ற போது ரத்தக்கரைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் குழி தோண்டி மூடப்பட்டதற்கான அடையாளம் இருந்ததால் உடனடியாக மோகனுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அதிகாரிகள் முன்னிலையில் குழியை தோண்டிய போது ஒரு பெண்ணின் உடல் நிர்வாணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு 30 வயது இருக்கும். அவரது தலையில் கல்லால் தாக்கியும் சிறிய கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அந்த பெண்ணை பற்றிய அடையாளம் தெரிந்தால் தான் அவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியும். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் விநோதமான…
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில், பெற்ற தாயே தன் சொந்தக் குழந்தைகளைக் கம்பத்தில் கட்டி வைத்துக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிகரமான…
இயற்கை தனக்குள் எண்ணற்ற மர்மங்களைக் கொண்டு மனிதர்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், தவளைகளின் உலகம் தொடர்பான…
நெல்லையில் 5 வயது பெண் குழந்தையின் கண்முன்னே இளம்பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை…
விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாது எனத் தான் தடுக்க முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மிகக் கடுமையான வார்த்தைகளில்…
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அந்த நிலையை அடைவதைத் தான் தடுக்க முயன்றதாகப் பரவும் வதந்திகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி…