திக் திக் திக்… மகா அஷ்டமி நாளில் ராஞ்சியில் பேரதிர்ச்சி… புதருக்குள் 17 வயது சிறுமி சடலம் மீட்பு… பகீர் பிண்ணனி என்ன?… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 20, 2026

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள மார்டு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, மகா அஷ்டமி நாளான அக்டோபர் 18 அன்று தனது ஏழு வயது உறவுக்காரச் சிறுவனுடன் வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பாத நிலையில், அப்பகுதியில் உள்ள புதர்களில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருடன் சென்ற சிறுமியும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள், அப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்து வழக்குகளுக்குத் தேவையான முக்கிய ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றன. குற்றவாளிகளை விரைந்து பிடிக்கத் தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

   

இக்கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தை அறிந்து ஏ.ஜே.எஸ்.யு கட்சித் தலைவர் சுதேஷ் குமார் மாத்தோ மற்றும் ஜே.எல்.கே.எம் தலைவர் தேவேந்திர நாத் மாத்தோ ஆகியோர் காவல்துறையினரை நேரடியாகச் சந்தித்துப் பேசினர். குற்றவாளிகள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.