கொடூரம்..! வீட்டு வாசலில் கிடந்த அக்கா, தம்பி சடலம்… தருமபுரியில் பரபரப்பு..!!

By Soundarya on ஆனி 25, 2026

Spread the love

தருமபுரி மாவட்டம் தகடூர் கிராமத்தில், நஞ்சம்மாள் (50) மற்றும் அவரது தம்பி மாதேஷ் (34) ஆகியோர் தங்களது வீட்டு வாசலில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த அக்கா நஞ்சம்மாளுக்கு, தம்பி மாதேஷ் தனது சொந்த நிலத்தை எழுதி வைத்துள்ளார். இதனால் மாதேஷின் மனைவிக்கும் அவரது அக்கா நஞ்சம்மாளுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே கடுமையான சொத்து தகராறு மற்றும் குடும்பப் மோதல்கள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த தீராத குடும்ப மற்றும் சொத்துப் பிரச்சினை காரணமாகவே இந்த இரட்டைக் கொலை அரங்கேறியதா என்ற கோணத்தில் தருமபுரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இக்கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தகடூர் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.