தமிழ் சினிமாவை பொருத்தவரை காமெடி என்றாலே வடிவேலு, விவேக் மற்றும் சந்தானம் உள்ளிட்ட நடிகர்கள் தான் நினைவுக்கு வரும். அதுவே பெண் காமெடி நடிகைகள் என்று கூறினால் அனைவரும் வருவது கோவை சரளாதான். இவர்களைத் தொடங்கி பெண் காமெடி நடிகையாக களமிறங்கியவர் தான் மதுமிதா. ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நகைச்சுவை தொடரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் தொடர்ச்சியாக சன் டிவியில் பெரிய பாப்பா மற்றும் சின்ன பாப்பா என்ற தொடரில் நடித்து தனது அற்புதமான காமெடிகளை அதில் வெளிப்படுத்தி இருப்பார். இதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்க இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து நடித்து வந்த இவர் சமீப காலமாக இதுவரை எதிலும் காண முடியவில்லை.இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது மதுமிதா boat என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தத் திரைப்படத்தின் ஷூட்டிங் நடுக்கடலில் ஒத்த படகில் நடைபெற்ற நிலையில் அது தொடர்பான வீடியோவை மதுமிதா பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
