நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் அண்மையில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ஒரே காரில் சென்றது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் தொண்டர் ஒருவர் இதற்கு விசித்திரமான விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் விஜய் தனது சொந்த காரில் சென்றால் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்வார்கள் என்பதால், கூட்டத்தைத் தவிர்க்கவே அவர் த்ரிஷாவின் காரில் சென்றதாக அந்தப் பெண்மணி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த விளக்கத்தை சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வரும் நிலையில், சினிமா விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன் தனது எக்ஸ் தளத்தில் இந்தப் பெண்ணின் கருத்தைப் பகிர்ந்து கடுமையாகக் கலாய்த்துள்ளார்.
இந்நிலையில் “இந்த தவெக பெண், அந்த கட்சியின் ஆண்களை விட மிகவும் புத்திசாலியாக இருக்கிறார் அனைவரையும் ஓவர் டேக் செய்துவிட்டார்” என்று அவர் பதிவிட்டுள்ள கிண்டல் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. விஜய்யின் விவாகரத்து சர்ச்சைகள் மற்றும் மகளிர் தின விழாவில் அவர் பேசிய கருத்துகளுக்கு இடையே, இந்த ‘கார் பயணம்’ குறித்த விவாதம் இணையத்தில் இன்னும் தணியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
