#image_title
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இயக்குனர் பா.ரஞ்சித் ஏற்கனவே அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை என வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். தங்கலான் திரைப்படத்தை ரஞ்சித் மாபெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளார். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்தார். கே.ஜி.எப் எனப்படும் கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கலான் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ளார். மேலும் பசுபதி, மாளவிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தங்கலான் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் கூறியதாவது, தங்கலான் படத்தில் கோலார் தங்க வயல் பற்றிதான் கூறுகிறார்கள். தென் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை அங்கு அழைத்துச் சென்று தங்க வயலை தோண்ட பணியமர்த்துகின்றனர். அங்கு அவர்கள் சிந்திய வியர்வை, ரத்தம், உயிர் பலி ஆகியவற்றை எடுத்து சொல்வது தான் கதை என நாம் நினைத்தோம்.
ஆனா அந்த ரத்த சரித்திரத்தை எடுக்குறத விட்டுட்டு ரஞ்சித் வர்ணாசிரமம், சிறு தெய்வ வழிபாடு, புத்தர், ராமானுஜம் ஆகியோர கொண்டு வந்து தன்னோட ஜாதி மதம் பற்றிய அரசியல் நிலைப்பாட்ட அழுத்தம் திருத்தமா சொல்லாம எப்போதும் போல பூசி உருட்டி வச்சிருக்காரு. கதையை குழப்பி எடுத்து வச்சிருக்காரு. ஒவ்வொரு சீனும் ஏற்கனவே வந்த பரதேசி ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சேர்த்து எடுத்து வச்ச மாதிரி இருக்கு. வசனமும் புரியல. கதையும் புரியலன்னு படத்தை பார்க்கும்போது நிறைய பேர் சொன்னாங்க கீழ சப்டைட்டில் போட்டா நல்லா இருக்கும்னு சொல்லிட்டு இருந்தாங்க.
அவங்க போட்டிருந்த காஸ்டியும், குடியிருப்பு பகுதி எல்லாமே செயற்கையா இருந்துச்சு. இதே மாதிரி VFX சரியா இல்ல. அந்த பாம்பு, சிறுத்தை வர காட்சி எல்லாமே செயற்கையா தான் இருந்துச்சு. ஆரம்பத்துல படம் நல்லாதான் இருக்கு. அதுக்கு அப்புறம் ஹீரோ கற்பனையாக கதை சொல்றாரு. மறுபடியும் ரியாலிட்டிக்கு வருகிறார். மறுபடியும் கற்பனை கதைக்கு போயிடுறாரு. இப்படி குழப்பி குழப்பி இருக்கிறதுனால எது கதைன்னு நம்மளால புரிஞ்சுக்க முடியல. விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகா எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க.
ஜிவி பிரகாஷ் நல்லா இசையமைத்திருக்கிறார். பா.ரஞ்சித் கதை, திரைக்கதை சரியா இல்லாமல் படத்தை ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்து வச்சிருக்காரு. அது மட்டும் இல்லாம பார்ட் 2-க்கு லீட் கொடுத்து கடைசில முடிச்சு வச்சிருக்காங்க. அட்டகத்தி, சார்பட்டா பரம்பரை, மெட்ராஸ் ஆகிய படத்தில் பா. ரஞ்சித் உண்மைக்கு நெருக்கமா படத்தை எடுத்து வைத்திருப்பார். அப்படிப்பட்ட ரஞ்சித் உண்மையான தங்கலான் படத்தை எடுத்தால் எப்படி இருக்கும் என நினைத்து போய் படம் பாக்குறவர்களுக்கு தொங்கலாம்னு தோணிரும் என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…