தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் படத்தை அவரே எழுதி இயக்கி வருகிறார், தற்போது படப்பிடிப்பு முடிந்து ப்ரீ- ப்ரொடக்ஷன் தயாரிக் கொண்டிருக்கிறது. இப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் என்று தனுஷ் அறிவித்திருந்தார். அந்த நிலையில் தனுஷின் அடுத்த படமான குபேரன் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வரும் படம் தான் குபேரன்.
சமீபத்தில் கூட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு இருந்தார்கள். தனுஷ் அவர்கள் பிச்சைக்காரன் போல் தோற்றமளித்து நிற்பது போல் அந்த போஸ்டரில் இடம் பெற்றிருந்த அதை பார்த்து ரசிகர்கள் மாபெரும் வரவேற்பை கொடுத்தார்கள். அதற்கடுத்ததாக கார்ப்பரேட் மான்ஸ்டர் போல் கோட் சூட் அணிந்து அவர் 2 லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். இப்படமும் குபேரன் படத்தின் கதை தான் என்று வைரலாகி வந்து கொண்டிருந்தது.
தற்போது இப்படத்தின் கதை கசிந்துள்ளது; மும்பையில் உள்ள தாராவியில் பிச்சைக்காரன் போல் சுற்றி திரியும் தனுஷ் திடீரென ஒரு மாஃபியா கேங் ஆக உருவெடுத்து அங்கு இருக்கும் பல பேரை அடித்து தொம்சம் செய்து விட்டு முதல் இடத்துக்கு வருவது தான் இப்படத்தின் கதையாம். இதை அறிந்த ரசிகர்கள் எம் ஆர் ராதா முதல் எம்ஜிஆர் வரையும் இப்பட கதை தான் ஆரம்பத்தில் இருந்து தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்டு வருகிறது, எப்பொழுதுதான் இதை மாற்றப் போகிறீர்கள் என்று விமர்சித்து வந்தார்கள். இதைத் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் கூட தற்போது, எப்பொழுது தமிழ்நாட்டில் ஹீரோ திருந்த போகிறார்களோ என்று இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு கலாய்த்து விமர்சித்து வந்துள்ளார்.
அதாவது, ஒரு சாமானியன் போதை பொருள் விற்று கான்ஸ்டர் ஆக உருவெடுத்து ஹீரோவாக மாறுவதை தமிழ் சினிமாவின் வழக்கமான கதையாக வைத்திருக்கிறார்கள், இவர்கள் எப்பொழுது திருந்த போகிறார்கள் என்று தனது இணையதள பக்கத்தில் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு கலாய்த்து உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
தமிழ்நாட்டு ஹூரோக்கள் திருந்த வாய்ப்பே இல்ல.
டான், கேங்ஸ்டர், ஹார்பர், போதைப்பொருள் கடத்தல்.. pic.twitter.com/jLW62m1KSi
— Blue Sattai Maran (@tamiltalkies) March 17, 2024
தமிழ்நாட்டு ஹூரோக்கள் திருந்த வாய்ப்பே இல்ல.
டான், கேங்ஸ்டர், ஹார்பர், போதைப்பொருள் கடத்தல்.. pic.twitter.com/jLW62m1KSi
— Blue Sattai Maran (@tamiltalkies) March 17, 2024