இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த பணியின் போது தீவிர பணிச்சுமை மற்றும் மூத்த அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக பல BLO அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேரி கொண்டிருக்கின்றன. அதன்படி உத்திர பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் SIR தொடர்பான பணி அழுத்தம் காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் சர்வேஸ் சிங் (46) என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
உதவி ஆசிரியரான இவர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி BLO ஆக நியமிக்கப்பட்ட நிலையில் தேர்தல் தொடர்பான பணிகளுக்கான அவரது முதல் பணி இதுவாகும். இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பதிவு செய்த வீடியோவில், கடினமாக உழைத்தாலும் என் வேலையை முடிக்க முடியவில்லை. நான் துயரத்தில் இருக்கிறேன். கடந்த 20 நாட்களாக என்னால் தூங்க முடியவில்லை. மற்றவர்கள் வேலையை முடித்து வருகிறார்கள். அம்மா சகோதரி என்னை மன்னித்து விடுங்கள். என் மகள்களை பார்த்துக் கொள்ளுங்கள்.
நான் தேர்தல் பணியில் தோற்றுவிட்டேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இவர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த தற்போது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸ் ஆர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
BLO took his own life under unbearable pressure and the ECI still won’t take responsibility.
Blood is on the hands of the ECI.
This is what a state-sponsored murder.
I said what I said .The people at the top should be facing real accountability. pic.twitter.com/1abhwnK7PH
— aree_shuklajii (@th_anonymouse) November 30, 2025
