தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் அதிமுக மற்றும் திமுக என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறை தங்கள் ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் கிடப்பில் கிடந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதால் மக்களின் ஆதரவை சம்பாதிக்க தீவிரம் காட்டுகிறது. இந்நிலையில் தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவர விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. அதை முறியடிக்க பாஜக வியூகம் அமைத்து வருகிறது. டாஸ்மாக், சாராய உயிரிழப்புகள், போதைப்பொருள், சட்டம் ஒழுங்கு, முன்னாள் அமைச்சர் பொன்மொழியின் ஆபாச பேச்சுகளை தொகுத்து வீடு வீடாகச் சென்று துண்டறிக்கை கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் தீபாவளிக்கு பிறகு பிரச்சாரம் சூடு பிடிக்கும் என தெரிகிறது.
