தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் விளைவாக ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் கேள்வி எழுப்பியதால் அவரை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கி சமீபத்தில் இபிஎஸ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் முகாமிட்டுள்ள நயினார் நாகேந்திரன், NDA கூட்டணி, உள்கட்சி பூசல் தொடர்பாக அமித்ஷா, JP நட்டா, BL சந்தோஷ் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை டெல்லிக்கு அழைத்துப் பேச பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. ஆனாலும் ஒருங்கிணைப்பு விவகாரத்தில் இபிஎஸ் திட்டவட்டமாக நோ சொல்லி வருவதால் அவரை சமாதானம் செய்யவும் ஒரு புறம் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…