“என் கட்சியிலேயே எனக்குப் பாதுகாப்பு இல்லை”…. அசிங்க அசிங்கமா பேசுறாங்க…. மேடையிலேயே கதறிய பாஜக பெண் கவுன்சிலர்….!

Spread the love

தென்காசி நகர்மன்றக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர், தனது சொந்தக் கட்சியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி நகராட்சியின் 23-வது வார்டு உறுப்பினரான சுனிதா, நகர்மன்றத் தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் இந்த அதிரடிப் புகாரை முன்வைத்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது வார்டுப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருவதாகவும், ஆனால் சமீபகாலமாகத் தனது கட்சியினரே தன்னைத் தனிமைப்படுத்தி வருவதாகவும் சுனிதா வேதனையுடன் தெரிவித்தார். குறிப்பாக, நகர பாஜகவைச் சேர்ந்த சிலர் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தன் மீது மிக மோசமான அவதூறுகளைப் பரப்பி வருவதாகவும், இது குறித்து கட்சித் தலைமையிடம் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறிக்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியிலேயே, ஒரு பெண் பிரதிநிதிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக அவர் பகிரங்கமாகப் பேசியது கூட்டத்தில் இருந்த மற்ற உறுப்பினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. “அசிங்க அசிங்கமாகப் பேசுகிறார்கள், என் கட்சியிலேயே எனக்கே பாதுகாப்பு இல்லை” என்று அவர் கதறி அழுதது அங்கு ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியது.

இதற்குப் பதிலளித்துப் பேசிய நகர்மன்றத் தலைவர் சாதிர், நகர்மன்றத்தில் உள்ள அனைத்து பெண் உறுப்பினர்களுக்கும் உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உறுதியளித்தார். மேலும், உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் நேரடியாகக் விமர்சிக்கக் கூடாது என்றும், புகார்களை முறையான மரபுகளின்படி தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பாஜக பெண் கவுன்சிலரின் இந்தச் செயல்பாடு மற்றும் குற்றச்சாட்டுகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

அட கொடுமையே… பூனையைக் காப்பாற்றப் போய் நேர்ந்த கொடூரம்… 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து… பயிற்சியாளர் பரிதாப பலி… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

துருக்கியின் புர்சா பகுதியில் 45 வயதான ஷாஹின் டி என்ற பயிற்சியாளர், ஆபத்தில் இருந்த ஒரு பூனைக்குட்டியைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.…

10 minutes ago

ஐயோ…என்னை யாராவது காப்பாத்துங்க… உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தனியாக… ஓடிய 8 வயது குழந்தை… வெளிவந்த அதிர்ச்சி வீடியோ…!

டெக்னஸிலுள்ள பெல்மா பென்னி தொடக்கப் பள்ளியில் கடந்த 2026 ஏப்ரல் 15 அன்று, எட்டு வயது சிறுமி ஏட்ரியன் தாம்சன்…

33 minutes ago

திக் திக் திக்… மாணவியை வகுப்பறை வெளியே… கத்தியால் குத்திய 14 வயது மாணவன்… பாலேவாடி தனியார் பள்ளியில் பரபரப்பு… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

பாலேவாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், வெள்ளிக்கிழமை மதியம் வகுப்பறைக்கு வெளியே மற்றொரு…

53 minutes ago

அட கொடுமையே… கணவனின் உடலை துண்டு துண்டாக்கி… சிமெண்ட் பேரலில் அடைத்த மனைவி… மரண தண்டனையை எதிர்த்து… உயர் நீதிமன்றத்தில் திடீர் மனு தாக்கல்…!

மீரட் நீல டிரம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முஸ்கான் மற்றும் அவரது காதலன் சஹில், அந்தத் தீர்ப்பை…

1 மணத்தியாலம் ago

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

11 மணத்தியாலங்கள் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

11 மணத்தியாலங்கள் ago