BREAKING: காலையிலேயே பரபரப்பு…. அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகல்?… யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பம்…!

By Nanthini on கார்த்திகை 8, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக ஒரு பக்கம் வெற்றிக்கான வியூகங்களை வகுத்து வர மறுப்பக்கம் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது. இவர்களுக்கு நடுவே விஜய் களத்தில் இருப்பதால் அவரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் 2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவுக்கு மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உளவுத்துறை நடத்திய சர்வேவில், அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி வைத்தால் கண்டிப்பாக திமுக வீழ்த்தப்படும் என தெரிய வந்துள்ளதாம். பாஜகவை காரணம் காட்டி கூட்டணியில் சேர விஜய் மறுப்பதால் சில தியாகங்களை செய்ய டெல்லி தலைமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கூட்டணியில் இருந்து விலகினால் தேர்தலை எப்படி எதிர்கொள்வது பற்றி பாஜக தலைமை யோசித்து வருகிறதாம்.