தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை வெற்றி பெற்ற நான்கு தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் மட்டுமே தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் கோவையில் தலா ஒரு தொகுதி மட்டுமே பாஜகவிற்கு கிடைத்துள்ளது. குறிப்பாக, சென்னையில் கடந்த முறை இரண்டு இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை மயிலாப்பூர் தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
வெளியாகியுள்ள உத்தேச வேட்பாளர் பட்டியலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம் பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறப்படும் நிலையில், கோவையில் வானதி சீனிவாசன் இந்த முறை கோவை தெற்கு தொகுதிக்குப் பதில் கோவை வடக்கில் களமிறங்க உள்ளதாகத் தெரிகிறது. மேலும், மத்திய அமைச்சர் எல். முருகன் அவினாசி தனி தொகுதியிலும், நயினார் நாகேந்திரன் திருநெல்வேலிக்கு பதிலாக சாத்தூர் தொகுதியிலும் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை கமலாலயத்தில் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையில் நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், அண்ணாமலை இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தொகுதிப் பங்கீடு மற்றும் இடமாற்றம் தொடர்பாக அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக ஒருபுறம் பேசப்பட்டாலும், தேர்தல் வியூகங்களின் ஒரு பகுதியாகவே இந்த மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன.
பாஜக வேட்பாளர்கள் – உத்தேச பட்டியல்
அமர்பிரசாத் ரெட்டி – தளி
மொடக்குறிச்சி – கிருத்திகா சிவகுமார் அல்லது காயத்ரி
எல். முருகன் – அவிநாசி ஏ
.பி. முருகானந்தம் – திருப்பூர் தெற்கு
நயினார் நாகேந்திரன் – சாத்தூர்
கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் – திருச்செந்தூர்
பொன் ராதாகிருஷ்ணன் – நாகர்கோவில்
எட்வின் ஜோஸ் – பெத்மநாபபுரம்
சிவக்குமார் – குளச்சல்
விஜயதாரணி – விளவங்கோடு
அஸ்வத்தாமன் – திருவண்ணாமலை
கருப்பு முருகானந்தம் – தஞ்சாவூர்
ராமச்சந்திரன் – புதுக்கோட்டை
ஆனந்தன் அய்யாசாமி – வாசுதேவநல்லூர்
ஜி.பி.எஸ். நாகேந்திரன் – ராமநாதபுரம்
பிரேம் குமார் – ராசிபுரம்
தமிழிசை சௌந்தரராஜன் – மயிலாப்பூர்
அஸ்வின் – ஆவடி
வானதி சீனிவாசன் – கோயம்புத்தூர் வடக்கு
போஜ ராஜன் – உதகமண்டலம்
புரட்சி கவிதாசன் – கந்தர்வகோட்டை
சோழன் சி.த. பழனிச்சாமி – திருப்பத்தூர்
கவிதா ஸ்ரீகாந்த் – அறந்தாங்கி
ராம சீனிவாசன் – மதுரை தெற்கு
பாலகிருஷ்ணன் – ராதாபுரம் பண்ணைவயல்
இளங்கோ – திருவாரூர்
பொன் பாலகணபதி – மானாமதுரை
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…