அடுத்த அதிர்ச்சி..! பாஜகவிலிருந்து விலகினார் முக்கிய புள்ளி… PM மோடி தலையில் விழுந்த இடி..!!

By Soundarya on ஆனி 9, 2026

Spread the love

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தமிழ்நாடு மாநில செய்தித் தொடர்பாளரான ஸ்ரீகாந்த் கருணேஷ், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக விலகியுள்ளார். தற்போதைய தமிழக பா.ஜ.க-வில் நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும், தனது தனிப்பட்ட சில கடினமான அனுபவங்களின் காரணமாகவுமே இந்த ராஜினாமா முடிவைக் கனத்த இதயத்துடன் எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற பிரதமரின் பல்வேறு முக்கியப் பொதுக்கூட்டங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி கட்சி மேலிடத்தின் நன்மதிப்பைப் பெற்றவர் ஸ்ரீகாந்த் கருணேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பா.ஜ.க-விலிருந்து விலகியதைத் தொடர்ந்து, மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் மற்றும் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேஷ் உள்ளிட்ட முக்கிய மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த வரிசையில் தற்பொழுது செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷும் இணைந்துள்ளதால், தமிழக பா.ஜ.க-வில் உட்கட்சிப் பூசலும் நிர்வாக நெருக்கடியும் மேலும் அதிகரித்துள்ளது. இந்த அடுத்தடுத்த முக்கிய நிர்வாகிகளின் விலகல், வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான பா.ஜ.க-வின் வியூகங்களில் பலத்த பின்னடைவை ஏற்படுத்தலாம் என அரசியல் விமரிசகர்கள் கருதுகின்றனர்