நடிகர் ரஜினிகாந்தை மாநில ஆளுநராக்க பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவி வந்த செய்திகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், ஒரு பரபரப்பான புதிய தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரிடமும் ரஜினிகாந்த் எப்போதும் ஒரு சுமுகமான, இணக்கமான நட்புறவைப்பேணி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், ரஜினிகாந்தின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி அந்த புத்தகத்தை வெளியிட, ஸ்டாலின் அதனைப் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கும், தமிழகத்தில் திமுகவுக்கும் இடையே அரசியல் ரீதியாகக் கடுமையான மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், ஒரே மேடையில் இரு தலைவர்களும் ரஜினிக்காக இணையவிருப்பது பெரும் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழா மேடையே, எதிர்காலத்தில் உருவாகக்கூடும் புதிய அரசியல் சமன்பாடுகளுக்கும், புதிய கூட்டணிகளுக்கும் அச்சாரமாக அமையலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
