தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலைமை மாறி தற்போது விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பாஜக விஜய்க்கு முடிந்த உதவிகளை செய்து தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்நிலையில் கூட்டணி ஆட்சி டிமான்டுக்கு இபிஎஸ் முரண்டு பிடித்தால், விஜய் ஒரு ஆப்ஷனாக பாஜக வைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். திமுகவை வீழ்த்துவது மட்டுமல்லாமல் தமிழகத்தில் கால் பதிப்பதிலும் குறியாக உள்ள அக்கட்சி, இபிஎஸ் ஒத்துவராவிட்டால், விஜய் தலைமையில் NDA கூட்டணியை அமைக்கவும் தயங்காதாம். அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள் (ஓபிஎஸ், டிடிவி தினகரன்) மற்றும் அதிருப்தியாளர்கள் (KAS), பாமக, தேமுதிகவையும் உள்ளே கொண்டுவர வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது.
