தமிழக அரசியல் களம் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு துருவங்களுக்கு இடையே, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில், தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும், ‘தொங்கு சட்டசபை’ அமையவே வாய்ப்புள்ளதாகவும் பாஜக மேலிடம் கணித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, “தேர்தலுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து ஆட்சி அமைப்போம்” எனத் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் இந்த ‘போஸ்ட் எலக்சன்’ ஸ்கெட்ச் மிகவும் நுணுக்கமானது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய்யின் TVK, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று சக்திகளையும் இணைத்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்கி, திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றுவதே டெல்லியின் திட்டம் எனக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்து, அவருக்குப் பின்பலமாக விஜய்யின் இளைய ரத்தத்தையும், பாஜகவின் தேசிய பலத்தையும் இணைப்பதன் மூலம் ஒரு நிலையான மாற்றத்தை தமிழகத்தில் கொண்டு வர முடியும் என கமலாலயம் கணக்குப் போடுகிறது.
இருப்பினும், இந்தத் திட்டத்தில் உள்ள மிகப் பெரிய சவால் விஜய்யின் நிலைப்பாடுதான். விக்ரவாண்டி மாநாட்டில் பாஜகவை “கருத்தியல் எதிரி” என விஜய் பகிரங்கமாகச் சாடியிருந்தார். ஆனால், சமீபகாலமாக அவர் பாஜகவை விமர்சிப்பதில் காட்டும் மென்மையான போக்கு, தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஒரு சமரசத்திற்கு வழிவகுக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஏற்கனவே பாஜகவின் பழைய நிர்வாகிகள் பலர் விஜய்யின் கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பதால், அவர்களை ஒரு பாலமாகப் பயன்படுத்தி கூட்டணியை உறுதி செய்ய டெல்லி காய் நகர்த்தி வருகிறது.
உளவுத்துறை அறிக்கைகளின்படி, விஜய்யின் வேட்பாளர் பட்டியலில் உள்ள இளைஞர்கள் பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பிரிக்கக்கூடும் எனத் தெரிகிறது. இந்த ‘கிங் மேக்கர்’ அந்தஸ்தை வைத்துக்கொண்டு, விஜய் தனது கொள்கைகளில் சமரசம் செய்வாரா அல்லது தனித்து நின்று தனது அரசியல் அடையாளத்தைக் காப்பாரா என்பதுதான் இப்போதைய கேள்வி. ராமதாஸ் அத்வாலேவின் பேச்சு ஒரு ‘ட்ரையல் ரன்’ போல அமைந்தாலும், தமிழகத்தின் எதிர்கால ஆட்சி அதிகாரம் விஜய் எடுக்கும் முடிவில்தான் அடங்கியிருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…