மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று கனமழை கொட்டி தீர்த்ததால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது. நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கனமழை மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது.
இந்நிலையில் நக்ரகட்டா பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிடுவதற்கு பாஜக எம்பி கஜென் முர்மு சென்று இருந்தார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் மீது சிலர் கற்களை வீசி கடுமையாக தாக்கிய நிலையில் பாஜக எம் பி முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்தம் சொட்ட சொட்ட அவர் காரில் ஏறி சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது
சமூக வலைதளங்களில் லைக், ஷேர் மற்றும் ஃபாலோயர்ஸ்களைப் பெறுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதமான லட்டு பிரசாதத்தைப் பயன்படுத்துவதாக எழுந்த…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடையில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டச் சாம்பாரில், அதே ஊரைச் சேர்ந்த…
தேசிய அரசியலில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி கருத்துக்கணிப்பு…
சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…
தமிழகத்தில் பல தசாப்தகால திராவிடக் கட்சி ஆதிக்கத்தை உடைத்து, எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிட்டு 35 சதவீத வாக்குகளுடன்…