கண்ணா நீ தூங்குடா..! அமைச்சர் பாடம் எடுக்க… தூக்கத்தில் ஆழ்ந்த பாஜக எம்.எல்.ஏக்கள்.. சட்டப்பேரவையில் ருசிகரம்..!!

By Soundarya on தை 4, 2026

Spread the love

தெலங்கானா சட்டப்பேரவையில் நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்து அம்மாநில அமைச்சர் என். உத்தம் குமார் ரெட்டி பவர் பாயிண்ட் (PowerPoint) விளக்கக்காட்சி அளித்துக் கொண்டிருந்தபோது, பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சிலர் அயர்ந்து தூங்கியது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பாலாமுரு-ரெங்காரெட்டி எத்திப்பொதுத் திட்டம் (PRLIS) மற்றும் கிருஷ்ணா நதி நீர் உரிமைகள் குறித்து விளக்க அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி இந்த பவர் பாயிண்ட் விளக்கக்காட்சியை வழங்கினார். அமைச்சர் முக்கியத் தரவுகளை விளக்கிக் கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த காட்சிகள் கேமராக்களில் பதிவாகின.

மக்கள் நலன் சார்ந்த முக்கிய நீர்ப்பாசனப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்போது மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு தூங்குவது சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளானது. தனது விளக்கக்காட்சியின் போது, முந்தைய பி.ஆர்.எஸ் (BRS) அரசு பாலாமுரு-ரெங்காரெட்டி திட்டத்தை இடமாற்றம் செய்ததன் மூலம் மாநிலத்திற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.