தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் தெற்கு தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வான வானதி சீனிவாசன், வரும் தேர்தலில் அந்தத் தொகுதியிலிருந்து விலகி கோவை வடக்கு தொகுதிக்கு மாறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறை கடும் போட்டிக்கிடையே நடிகர் கமல்ஹாசனை வீழ்த்தி வெற்றி பெற்ற வானதி, இம்முறை தொகுதியில் நிலவும் சூழல் மற்றும் அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கோவை தெற்கு தொகுதியில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் கணிசமாக இருப்பதும், சமீபகாலமாக அங்கு நிலவும் அரசியல் சூழலும் பாஜகவிற்குச் சவாலாக அமையலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் ‘சிர்’ (SIR) பணிகள் மூலமாகத் திமுக அந்தத் தொகுதியில் தனது பிடியை பலப்படுத்தியுள்ளது. இதனால் பாதுகாப்பான ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில் வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியைக் குறிவைப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வானதி சீனிவாசன் தொகுதி மாற உள்ளதாகக் கூறப்படும் நிலையில், கோவை தெற்கு தொகுதியை நேரடியாகக் கைப்பற்ற திமுக தலைமை வியூகம் வகுத்துள்ளது. கடந்த முறை இத்தொகுதியைத் தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய திமுக, இம்முறை நேரடியாகத் தனது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதற்காகத் திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தியை வேட்பாளராகக் களமிறக்க அக்கட்சித் தலைமை பரிசீலித்து வருவதாகவும், அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேற்பார்வையில் கோவையில் திமுகவின் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் கடந்த முறை இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகுந்த முனைப்பு காட்டி வருகிறார். ராஜீவ் காந்தி ஏற்கனவே கோவை பகுதியில் பல்வேறு அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருவதால், கோவை தெற்கு தொகுதியில் இம்முறை திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே ஒரு பலப்பரீட்சை அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…