காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வரதராஜபுரத்தில், சொந்தக் கட்சி நிர்வாகியின் வீட்டை பாஜகவினரே அடித்து துவம்சம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்காக (SIR) பூத் ஏஜென்ட்டுகளுக்கு பாஜக மேலிடம் வழங்கிய பணத்தைப் பிரிப்பதில் கட்சி நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகி செல்வமணி என்பவர், ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிவிட்டு வீடு திரும்பியபோது, நள்ளிரவில் 5 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டை முற்றுகையிட்டது. அவர்கள் செல்வமணியைத் தாக்க முயன்றதோடு, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், அங்கிருந்த இரண்டு சொகுசு கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கினர். இந்த வன்முறை தொடர்பாகப் பாஜக நிர்வாகி பிரகாஷ் உள்ளிட்ட 5 பேரை மணிமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…