“எனக்கு டைம் ஆச்சு வழி விடுங்க….” பள்ளி ஆசிரியரை தடுத்த பாஜகவினர்…. பரபரப்பு வீடியோ….!!

By Srimathi on புரட்டாதி 5, 2025

Spread the love

பிரதமர் மோடியையும், அவரது தாயாரையும் அவதூறாக பேசியதை கண்டித்து செப்டம்பர் 4ஆம் தேதி காலை 7:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை பீகாரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது.

மேலும் நேற்று காலை 7:00 மணி முதல் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கி, அப்பகுதியில் பாஜகவினர் பேரணியாகச் சென்றனர். அப்பொழுது அங்கு வந்த பள்ளி ஆசிரியர். பள்ளிக்குச் செல்ல தாமதமாகிறது எனக் கூறி பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போராட்டம் நடைபெறும் பொழுது பள்ளி செல்வதா? எனக் கூறி பாஜக மகளிர் அணியினர் ஆசிரியரை தடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஆசிரியரை அங்கிருந்த போலீசார் பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.