“உனக்கு காசு மட்டும் வேணும், ஆசையா கூப்பிட்டா வரமாட்டியா”… இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த பாஜக நிர்வாகி… சென்னையில் நடந்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on ஆவணி 26, 2025

Spread the love

தனியார் நிறுவன ஊழியருடன் கள்ள தொடர்பில் இருந்த பாஜக நிர்வாகி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு மாவட்ட பாஜக துணை தலைவராக இருப்பவர்தான் சுரேந்தர். சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில் இவருக்கும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் பிரியதர்ஷினியின் கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பயன்படுத்தி பிரியதர்ஷினிக்கு பண உதவி செய்து அவருடன் சுரேந்தர் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இப்படியான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியதர்ஷினிக்கு சுரேந்தர் பணம் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரை உல்லாசமாக இருக்க அழைத்த நிலையில் அதற்கு சம்மதித்த பிரியதர்ஷினி தன்னுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வீட்டிலிருந்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தர் சாலிகிராமத்தில் உள்ள பிரியதர்ஷினி வீட்டுக்கு மதுபோதையில் சென்று தகராறு செய்துள்ளார். உனக்கு காசு வேண்டும், ஆனால் ஆசையாக அழைத்தால் வரமாட்டியா என தகாத வார்த்தைகளால் பிரியதர்ஷினியை அவரது கணவர் மற்றும் மகன் முன்பு திட்டியுள்ளார்.

   

இதனால் ஆத்திரமடைந்த பிரியதர்ஷினி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து சுரேந்தரை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உடலில் 31 தையல்கள் போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியதர்ஷினி இடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்