விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கும் பாஜகவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது என்று குஷ்பூ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பு, சிபிஐ வசம் வழக்கு இருப்பதால் தமிழக வெற்றி கழகம் கட்சியை மிரட்டி NDA கூட்டணிக்குள் பாஜக கொண்டு வரும் என்று அமைச்சர் பேசி உள்ளார். விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்காததற்கும், பாஜகவிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தற்போது வரை சென்சார் கிடைக்காததற்கும் தியேட்டர் சரிவர கிடைக்காததற்கும் அரசியல் காரணம் எதுவும் கிடையாது என்று குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கிய விஜயின் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் திரைப்படம் அமைந்துள்ள நிலையில் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எடுத்துள்ளது. இந்தப் படத்தோட சினிமாவை விட்டு விலகும் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.
