சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் கரூரில் நடைபெற்ற விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சிபிஐ விசாரணையில் கரூர் விவகாரம் உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட கட்சி பணிகளை விஜய் தொடர்ந்து செய்து வருகின்றார். கரூர் சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்தது, போக்குவரத்து நெரிசல் ஆகியவை காரணமாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் கரூர் விவகாரத்தை தொடர்ந்து, தவெகவை தங்களின் கூட்டணிக்கு இழுக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. NDA கூட்டணியில் இணையுங்கள் அல்லது அரசியலை விட்டு விலகுங்கள் என பாஜக, விஜய்க்கு அழுத்தம் கொடுப்பதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர்கள், பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட விஜய்க்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
