” பா.ஜ.க பிரமுகரின் வெறிச்செயல்… காருடன் தீ வைத்து எரிப்பு… என்ன நடந்தது…? சத்தீஸ்கரில் பயங்கரம்…!!”

By Swetha on ஆனி 19, 2026

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்டத்தில், மணல் குவாரி தகராறைப் பேசி தீர்ப்பதற்காக ஜூன் 16 அன்று இரவு தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்ற பாஜக பிரமுகரும் முன்னாள் ஜனபத் பஞ்சாயத்து தலைவருமான பாரத் சிங் என்பவரின் கார் லாரிகளால் முற்றுகையிடப்பட்டது. எதிர்த்தரப்பினர் காரைத் தப்பவிடாமல் மறித்து, அதன் மீது பெட்ரோல் ஊற்றி கொடூரமாகத் தீ வைத்தனர். இந்த பயங்கர சம்பவத்தில் பாரத் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; அவருடன் இருந்த வீரேந்திர சிங் மற்றும் நாகேந்திர சிங் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தக் கொடூரக் கொலைக்கு மணல் குவாரி தொடர்பான நீண்ட நாள் பகையே காரணமாகும். அப்பகுதியில் உள்ள மணல் குவாரி ஒப்பந்தம் பாரத் சிங்கின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், சோன்ஹத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணல் கடத்துவது மற்றும் சட்டவிரோத வசூல் செய்வது தொடர்பாக பாரத் சிங்கின் குழுவிற்கும், மற்றொரு பாஜக பிரமுகரான மனோஜ் திரிபாதியின் குடும்பத்திற்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான போட்டி நிலவி வந்ததே இந்தத் தாக்குதலுக்கு பின்னணியாகும் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

   

இச்சம்பவம் தொடர்பாக அக்ஷத் திரிபாதி, விஷால் திரிபாதி உட்பட 4 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்; மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் கூறுகையில், இந்த கொடூர சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.