தமிழக பாஜக மாநிலச் செய்தித் தொடர்பாளராக இருந்த ஏ.என்.எஸ். பிரசாத் அவர்கள் தனது கட்சிப் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை என்.டி.ஏ (NDA) கூட்டணியில் இணையுமாறு அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்தப் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பு மட்டுமின்றி, சட்டமன்றத் தேர்தல் பணிக் குழுவில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஊடகத்துறை பொறுப்பிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கருதி இந்த அதிரடி முடிவை பாஜக மேலிடம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், கூட்டணியைப் பற்றி மேலிடம் முடிவெடுக்கும் முன்பே தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
