தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுகவை சுற்றியுள்ள புதிய கூட்டணி சமன்பாடுகள் டெல்லி பாஜகவின் மென்மையான அணுகுமுறையை பிரதிபலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தனது பிடிவாதத்தைக் தளர்த்தி இறங்கிவந்த போதிலும், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு அது இன்னும் தயாராகவில்லை என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மாநிலத்தில் தவெக அரசால் நெருக்கடிகள் முற்றும்போது, வேறு வழியின்றி திமுக தங்களை நோக்கி நகர்ந்து வரும் என்று பாஜக தலைமை கணிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நீண்டகால கூட்டணி கணக்குகள் மற்றும் அரசியல் லாபங்களைக் கருத்தில் கொண்டே, இப்போதைக்கு தவெக மற்றும் அதன் தலைமை மீது தீவிரமான தாக்குதல் முறையைக் கையாளாமல் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிக்க டெல்லி பாஜக முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
