கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதிய ஜனதா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இடவக்கோடு வார்டில் காங்கிரஸ் கூட்டணி சார்பாக கடந்த முறை வெற்றி பெற்றிருந்த CPM கட்சியை சேர்ந்த பெண் வேட்பாளர் சினி போட்டியிட்டார். இவர் இந்த முறையும் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவாதி 1889 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் . சினி 1863 வாக்குகள் பெற்றிருந்தார். இதனால் பாஜக வேட்பாளரிடம் 26 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார்.
இந்த தோல்வியால் கடும் அதிர்ச்சி அடைந்தார். இந்த வார்டில் சினி என்ற பெயரில் மேலும் இரண்டு பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களுக்கு மொத்தம் 44 வாக்குகள் கிடைத்தன. இதுதான் அவருடைய தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் வீட்டிலிருந்த சினி திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் உடனே உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் திடீர் மாரடைப்புதான் மரணத்திற்கு காரணம் என்று கூறினர். இந்த சம்பவம் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…